Home Featured உலகம் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக யூரிகோ தேர்வு!

டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக யூரிகோ தேர்வு!

561
0
SHARE
Ad

Yuriko Koikeடோக்கியோ – ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யூரிகோ கொய்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது இன்று திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியான லிபெரல் ஜனநாயகக் கட்சியைச் (Liberal Democratic Party) சேர்ந்த கொய்கே எந்த ஒரு கட்சியின் ஆதரவும் இன்றி போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் ஹிரோயா மாசுடாவை எளிதில் தோற்கடித்துள்ளார்.