Home Featured தமிழ் நாடு சசிகலா புஷ்பா அதிமுக-விலிருந்து அதிரடியாக நீக்கம்!

சசிகலா புஷ்பா அதிமுக-விலிருந்து அதிரடியாக நீக்கம்!

566
0
SHARE
Ad

sasivc1சென்னை – டெல்லி விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் தகராறு செய்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா இன்று பிறப்பித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், டெல்லியிலிருந்து சென்னை திரும்ப திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்த போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், இருவரும் ஒருமையில் பேசி இறுதியில் சிவாவை சசிகலா கன்னத்தில் அறைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice