Home Featured உலகம் எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!

எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!

574
0
SHARE
Ad

MH370கேன்பெரா – எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய போது, அது விமானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த முன்னணி விமான விபத்து ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மடகாஸ்கரில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒருபகுதி (flaperon) வேறு எந்த ஒரு வழியிலும் விமானத்தில் இருந்து பிரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், விமானம் கடல் நீரை அடைந்த போது, அது கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் கனடாவைச் சேர்ந்த லேரி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்க முயற்சி செய்யும் போது தான் பிளாபெரான் (flaperon) விரிவடையும் என்றும், விமானி அதற்கான கட்டுப்பாட்டை இயக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மற்றபடி, திடீரென நிகழும் விபத்தில் அது நடக்க வாய்ப்பில்லை என்றும் வான்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் நைன் நெட்வொர்க் என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.