கோலாலம்பூர் – அனைத்துலக மலேசியக் கடப்பிதழ்களைத் தொலைத்துவிட்டு, அது பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டால், அதன் பின்னர் அந்தக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மீண்டும் கிடைத்துவிட்டாலும் அதனைப் பயன்படுத்த முடியாது என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்த கட்டுப்பாட்டின் படி, கடப்பிதழைத் தொலைத்துவிட்டால், உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
“தொலைந்து போன கடப்பிதழில் உள்ள அனைத்துத் தகவல்களும் இண்டர்போலின் தரவில் பகிரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அது பின்பற்றப்படுகின்றது” என்று உள்துறை அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.