Home நாடு குடியுரிமை சட்டத் திருத்தங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன!

குடியுரிமை சட்டத் திருத்தங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன!

304
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருந்த குடியுரிமை மீதான சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளைச் சந்தித்தைத் தொடர்ந்து – மலேசிய மாதர்களிடையே எதிர்ப்புகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து – அவற்றை மீட்டுக் கொள்ளும் முடிவை அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) அறிவித்தது.

தற்போது மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பிரிவு 19B தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

உத்தேச சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றை ஆழமாகப் பரிசீலித்த அமைச்சரவை குடியுரிமை மீதான சட்டத் திருத்தங்களை இப்போதைக்கு மீட்டுக் கொள்ளும் முடிவை எடுத்ததாகவும் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தின் இந்த முடிவை இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகப் போராடி வந்த அரசு சாரா இயக்கங்கள் வரவேற்றுள்ளன. எனினும் தாங்கள் இன்னும் இந்த விஷயத்தில் கவனமுடனும் கண்காணிப்புடனும் செயல்பட்டு வரப் போவதாகவும் அந்த இயக்கங்கள் தெரிவித்தன.