Home இந்தியா சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி

சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி

392
0
SHARE
Ad
சௌமியா அன்புமணி

சென்னை : பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பெற்றிருக்கும் பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அன்புமணி இராமதாஸ், அவரின் மனைவி சௌமியா அன்புமணி இருவருமே இடம் பெறாதது பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று தரும்புரி தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனால் பாமகவினர் உற்சாகமடைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம் என்ற திட்டத்தோடு அன்புமணி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.