Home Featured நாடு மலாக்காவில் இராணுவ இரகசிய ஆவணங்களை குரங்கு திருடிச் சென்றது!

மலாக்காவில் இராணுவ இரகசிய ஆவணங்களை குரங்கு திருடிச் சென்றது!

940
0
SHARE
Ad

Monkeyமலாக்கா – மலாக்காவிலுள்ள இராணுவப் பயிற்சி மையம் ஒன்றில், தபால்காரரிடமிருந்து இராணுவ இரகசியங்கள் கொண்ட ஆவணங்களை குரங்கு ஒன்று பறித்துச் சென்றுள்ளது.

இது குறித்து ஸ்டார் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், தெரெண்டாக் மையத்தில் தபால்காரர் தபால்களை விநியோகம் செய்யச் சென்ற போது, அங்கிருந்த குரங்களில் ஒன்று, மூன்று முக்கியமான இரகசிய ஆவணங்களை அவரிடமிருந்து பறிந்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தக் குரங்கைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice