ஏற்கனவே பல குற்றப் பின்னணி கொண்ட அந்நபர் நேற்று புதன்கிழமை செந்துலில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் எஸ்ஏசி ருஸ்டி மொகமட் இசா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 27-ம் தேதி, வி.கந்தசாமி (வயது 43) என்ற நபர், ஸ்தாப்பாவிலுள்ள ஜாலான் தாமான் கெந்திங் கிள்ளான் சாலை சந்திப்பு அருகே காரில் சென்று கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
அவரது உடலில் தலை, கை, கால் என பத்து இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments