Home Featured கலையுலகம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது ஜோக்கர், வாகா!

வெள்ளிக்கிழமை வெளியாகிறது ஜோக்கர், வாகா!

682
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை வெள்ளிக்கிழமை ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’ திரைப்படமும், விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

ஜோக்கர்:

joker-tamil-movie‘குக்கூ’ திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து முன்னாள் ஊடகவியலாளரான ராஜூ முருகன் இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. இத்திரைப்படத்தில் ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மக்களுக்காகப் போராட முன்வருபவர்கள் முதலில் ‘ஜோக்கராக’ பார்க்கப்படுவதாகக் கூறும் இத்திரைப்படம், யாரெல்லாம் ஜோக்கர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் ஜோக்கர்கள் இல்லை. உண்மையான ஜோக்கர்கள் யார்? என்பதை இத்திரைப்படம் காட்டும் என்று ராஜூ முருகன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வாகா:

Wagah Movie stills (2)‘ஹரிதாஸ்’ படத்தை  இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார். புதுமுகமான ரன்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் கருணாஸ், சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடக்கும் ஒரு காதல் கதை தான் ‘வாகா’ படத்தின் கதை என்கின்றனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்களின் பாதுகாப்போடு நடந்துள்ளதாம். அந்த அளவிற்கு இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவில் பதட்டத்துடனேயே படப்பிடிப்பு வேலைகளை நடத்தி முடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.

இரண்டுமே மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் என்ற நிலையில், எது மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்று வெற்றி வாகை சூடப் போகிறது என்பது நாளை முதல் தெரியவரும்.

இத்திரைப்படங்களின் விமர்சனங்களை நாளை செல்லியலில் படிக்கலாம்.