கராச்சி – பாகிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் 81 வயது ஹனிப் முகமட் இன்று நாள் முழுக்க இந்திய – பாகிஸ்தான் இணையத் தகவல் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்தார்.
நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று வியாழக்கிழமை காலை இருதயம் செயலிழந்த நிலையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். உடனடியாக, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் தங்களின் இணையச் செய்தித் தளங்களில் அவர் இறந்து விட்டதை அறிவித்தன.
ஆனால், மருத்துவர்களின் முயற்சியால் ஆறு நிமிடங்களுக்குப் பின்னர் ஹனிப் முகமட்டின் இருதயம் அதிசயமாக மீண்டும் இயங்கத் தொடங்கியது. உடனடியாக மீண்டும் அவர் உயிர் பிழைத்து விட்டார் எனவும், இலட்சக்கணக்கான இரசிகர்களின் பிரார்த்தனையால் தனது தந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும், அவரது மகன் ஷோய்ப் முகமட் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிவிக்க, அந்த செய்தியை, மீண்டும் இணைய ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
ஆனால், சில மணி நேரங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர் இறந்து விட்டதாக ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மூன்று வாரங்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
(மேலே படம் : சிவப்பு மேல் கோட்டுடன் ஹனிப் முகமட் – சச்சின் தெண்டுல்கருடன் – கோப்புப் படம்)