Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த பி.வி.சிந்து!

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த பி.வி.சிந்து!

1067
0
SHARE
Ad

sindhu-pv-india-badmintonரியோ டி ஜெனிரோ – வரிசையாக தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பதக்கம் பெறும் நம்பிக்கையை சற்றே விதைத்திருக்கின்றார் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து (மேலே கோப்புப் படம்)

பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் முதல் 16 விளையாட்டாளர்களில் ஒருவராகத் தேர்வு பெற்றிருக்கும் பி.வி.சிந்து, இன்றைய ஆட்டத்தில் ஹங்கேரியின் லவுரா சரோசியைத் தோற்கடித்ததன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியைப் பெற்றுள்ளார்.

இரண்டே நேர் ஆட்டங்களில் (செட்)  மிக சுலபமாக ஹங்கேரி விளையாட்டாளரைத் தோற்கடித்திருக்கின்றார் 21 வயதான சிந்து. உலக அளவில் இவர் 10வது நிலையை பூப்பந்து விளையாட்டில் இவர் வகிக்கின்றார்.

#TamilSchoolmychoice