Home Featured உலகம் தாய்லாந்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்!

தாய்லாந்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்!

922
0
SHARE
Ad

thailand-map.hua hin

பேங்காக் – நேற்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 10.20 மணியளவில், தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா மையமான ஹூவா ஹின் என்ற நகரின் (மேலே படம்) சொய் பிந்தாபாட் (Soi Bintabat) வட்டாரத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டார். 23 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலைமையில் இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

காயமடைந்தவர்களில் ஐவர் வெளிநாட்டவர்களாவர். மலேசியர்கள் யாரும் பாதிப்படைந்தனரா என்பது இதுவரை தெரியவில்லை.

சொய் பிந்தாபாட் பகுதியில் மதுபான விடுதிகள் அமைந்திருக்கும் இடத்திற்கு வெளியே செடிகள் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டுகள் அரைமணி நேர இடைவெளியில் இரண்டு இடங்களில் வெடித்தன.

முதல் வெடிகுண்டு வெடித்ததில் அங்கிருந்த ஒரு தள்ளுவண்டி வியாபாரி படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் காலமானார்.