Home Featured நாடு சஞ்சீவன் 8வது தடவையாக மீண்டும் கைது!

சஞ்சீவன் 8வது தடவையாக மீண்டும் கைது!

678
0
SHARE
Ad

SANJEEVAN-685x320

கோலாலம்பூர் – ‘மை வாட்ச்’ எனப்படும் அரசு சார்பற்ற குற்றத் தடுப்பு கண்காணிப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறை ஒரு சூதாட்ட மையத்தின் உரிமையாளரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு. காஜாங் காவல் துறை தலைமையகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகமும் உறுதிப்படுத்தியுள்ளது. டி7 (D7) எனப்படும் சூதாட்டம், விபச்சாரம், குண்டர் கும்பல் தொடர்பான குற்றங்களுக்கான பிரிவின் துணை இயக்குநர் ரோஸ்லி சிக் சஞ்சீவன் மீது 20 குற்றப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை தெமர்லோ (பகாங்) நீதிமன்றத்தில் சஞ்சீவன் குற்றம் சாட்டப்படுவார் எனவும் ரோஸ்லி கூறியுள்ளார்.

தான் கைது செய்யப்பட்டு, ஓர் இஸ்லாமியத் தீவிரவாதியைப்போல் நடத்தப்பட்டதாகவும், இருப்பினும் தமது போராட்டம் தொடரும் என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டதாக, பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சஞ்சீவன் கைது செய்யப்பட்டுள்ள தகவலை இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் தான் பெற்றதாக அவரது மனைவி கூறியிருக்கின்றார். தற்போது அவர் காஜாங் காவல் நிலையத்தில் காத்திருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாத கால இடைவெளியில் சஞ்சீவன் கைது செய்யப்படுவது இது எட்டாவது தடவையாகும்.

சஞ்சீவன் இதற்கு முன்னர் பொகா எனப்படும் குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 21 நாட்கள் சிறையில் இருந்தார். அவரது கைது சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூலை 26ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.