Home Featured தமிழ் நாடு சேலம் இரயில் கொள்ளை: தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வுத் துறை!

சேலம் இரயில் கொள்ளை: தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வுத் துறை!

673
0
SHARE
Ad

Trainசென்னை – சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு இரயிலில், மேற்கூரையில் துளையிட்டு, ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான, 5.75 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், குற்றப்புலனாய்வுத்துறை மிகத் தீவிரமாகத் துப்புத் துலக்கி வருகின்றது.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட இரயில் பெட்டியை, டிஜிபி அசோக்குமார், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன் சின்கா, ஐஜி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஆய்வுக்குப் பிறகு அவர்கள் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“இரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு, கொள்ளை அடித்த இந்த சம்பவம் போல, இதற்கு முன் நடந்தது இல்லை. எனவே, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.குற்றப்புலனாய்வுத் துறை விசாரித்து வந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக தமிழக இரயில்வே போலீஸ், இரயில்வே பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசாரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.”

“பொதுமக்கள், கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக, சிறு துரும்பு கிடைத்தாலும், சோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். சேலத்தில் இருந்து சென்னை வரை, அங்குலம் அங்குலமாக தடயம் சேகரிக்கும் பணி நடக்கிறது. இரயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் “ஈரோட்டில் இரயில் நின்ற போது தான், கொள்ளையர்கள் மிகவும் நேர்த்தியாக துளையிட்டுள்ளனர். அங்குள்ள இரயில்வே ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். சேலத்தில் இருந்து சென்னை செல்லும், 352 கி.மீ., துாரமுள்ள இரயில் பாதையில் தடயங்கள் சிக்குமா என, 35 அதிகாரிகள் தேடி வருகின்றனர்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இரயில் கொள்ளையில், விருத்தாசலம் – மூப்பூர் இடையே பணப் பெட்டியின் பாகம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று வியாழக்கிழமை வெளியான தகவலை உறுதிப்படுத்த அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.