Home Featured தமிழ் நாடு சேலம்-சென்னை ரயிலில் மத்திய வங்கிப் பணம் கொள்ளை!

சேலம்-சென்னை ரயிலில் மத்திய வங்கிப் பணம் கொள்ளை!

1216
0
SHARE
Ad

chennai-train-robberyசென்னை – சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் இருந்த மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க் இந்தியா) கோடிக்கணக்கான பணம் திரைப்படப் பாணியில், இரயிலின் மேற்கூரையில் ஓட்டை போடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.

இரயிலில் வந்தது மொத்தம் 342 கோடி ரூபாய் என்றும் அவை வங்கிக்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்ட பழைய, நைந்த நோட்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 228 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பணம் ஒரு இரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இரயில் சென்னை வந்த பிறகே பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

சில பெட்டிகளில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சென்னை காவல் துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)