Home Featured நாடு புதியக் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்தார் மொகிதின்!

புதியக் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்தார் மொகிதின்!

1029
0
SHARE
Ad

muhyiddin-yassin1புத்ராஜெயா – அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை ‘பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா’ என்ற தனது புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை சங்கப்பதிவிலாகாவிடம் சமர்ப்பித்தார்.

மலேசியர்களின் உரிமையைத் தற்காக்கும் நோக்கில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தக் கட்சியில் உறுப்பினராகும் உரிமை அனைத்து மலேசியர்களுக்கு உண்டு. பூமிபுத்ரா, ஓராங் அஸ்லி, சபாவைச் சேர்ந்தவர்கள், சரவாக்கைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் உறுப்பினராகலாம்” என்று மொகிதின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice