Home Featured இந்தியா முன்னாள் அருணாச்சலப் பிரதேச முதல்வர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்!

முன்னாள் அருணாச்சலப் பிரதேச முதல்வர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்!

892
0
SHARE
Ad

kalikho PUL-former Arunachala cm-decd

இடா நகர் – அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல், தனது இல்லத்தின் மேற்கூரையிலுள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

முதலமைச்சராக அவர் பதவி வகித்தபோது வசித்து வந்த இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கி, இறந்து கிடந்ததை, அவரது மனைவி கண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்காலம் முடிந்தும் இன்னும் அவர் அந்த இல்லத்தை விட்டு வெளியேறாமல் இருந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் நீதிமன்ற உத்தரவால் தனது முதல்வர் பதவியை இழந்தார் 47 வயதான கலிக்கோ புல். அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அரணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் பேமா காண்டுவின் இல்லத்தின் முன் திரண்டு, கலிக்கோவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று காலை 7.00 மணி முதல் 7.30 மணிக்குள்ளாக அவருக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மூன்று மனைவியரும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஏழு நாட்களாக அவர் வெளியாட்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

இதற்கிடையில் கலிக்கோ புல் மரணமடைந்த இடாநகர் வட்டாரம் பதட்டமான நிலைமையில் இருந்து வருவதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கலிக்கோவின் உடல் அவரது இல்லத்தில் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கின்றது.