Home Featured கலையுலகம் பாடலாசிரியர்-தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

பாடலாசிரியர்-தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

958
0
SHARE
Ad

panchu-arunasalam-decd

சென்னை – தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான, பஞ்சு அருணாசலம், தனது 75வது வயதில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரது நல்லுடல் சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை வரை வைக்கப்பட்டிருக்கும் என்றும் அதன்பின்னர் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அவரது புதல்வி குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன்தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையக் காலமாக இவர் ‘திரைத் தொண்டர்’ என்ற தலைப்பில் தனது திரையுலக வாழ்க்கையின் சுவாரசிய சம்பவங்களை தொடர் கட்டுரையாக, ஆனந்த விகடன் இதழில் வாரம் தோறும் எழுதி வந்தார். அந்தத் தொடர் இன்னும் நிறைவு பெறவில்லை.