Home Featured நாடு அழகின் பின்னே ஆபத்து – கூச்சிங்கில் சம்பவம்!

அழகின் பின்னே ஆபத்து – கூச்சிங்கில் சம்பவம்!

689
0
SHARE
Ad

Sex workerசிபு – கூச்சிங்கில் மலிவு விலைத் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு ஆண்கள் திடீரெனத் தங்கள் அறைக்கு பாலியல் சேவைக்காக பெண் ஒருவரை அனுமதித்துள்ளனர்.

கதவு திறக்கப்பட்டதும் அந்த இளம் பெண்ணின் பின்னாலேயே நுழைந்த, கும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த பணத்தையும், பொருட்களையும் கேட்டுள்ளனர்.

அவர்கள் கொடுக்க மறுக்கவே மழுங்கிய ஆயுதம் ஒன்றால் தலையில் தாக்கியுள்ளனர். அதன் பின்பு அவர்களிடமிருந்து 300 ரிங்கிட் பணம் மற்றும் இரு செல்பேசிகள் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேரைக் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.