Home Featured கலையுலகம் “தன் நலம் பேணாத் தற்கொலை” – நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் வருத்தம்!

“தன் நலம் பேணாத் தற்கொலை” – நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் வருத்தம்!

650
0
SHARE
Ad

kamal-hassanசென்னை – மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 41.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கும் நன்றி.”

“ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், சினிமாவிலும் நிறைய எழுதினார். உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா. புத்தகங்களில் நீ விட்டுச் சென்ற உன் எழுத்துக்களுக்காக நன்றி. பாதி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருப்பாய் என நம்புகிறேன், இனி உன் படைப்புகளை நாங்கள் அனுபவிக்கப் போவதைப் போல! ” என்று கமல் வருத்தம் தெரிவித்துள்ளார்.