ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் 100 மீட்டருக்கான ஓட்டப் பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் முதலாவதாக தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வரிசையாக மூன்றாவது முறையாக தங்கம் பெற்று, இதுவரை யாரும் புரியாத சாதனையைப் புரிந்திருக்கின்றார் போல்ட்.
9.81 வினாடிகளில் தனது தங்கப் பதக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றார் போல்ட்.
அவருக்கு கடும் போட்டியை வழங்கி வந்த அமெரிக்காவில் ஜஸ்டின் காட்லின் இரண்டாவதாக வந்தார். 9.89 வினாடிகளில் 100 மீட்டரைக் கடந்தார் ஜஸ்டின்.
மூன்றாவதாக, கனடாவின் அண்ட்ரிட்ரி டி கிராசெ வெண்கலப் பதக்கம் பெற்றார். அவர் எடுத்துக் கொண்ட நேரம் 9.91 வினாடிகள்.
கடுமையான போட்டியில், சில வினாடிகள் இடைவெளிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர்கள்…