Home Featured இந்தியா 70-வது சுதந்திர தினம்: முப்படை அணிவகுப்பில் பிரதமர் மோடி!

70-வது சுதந்திர தினம்: முப்படை அணிவகுப்பில் பிரதமர் மோடி!

790
0
SHARE
Ad

Modi

டெல்லி- இந்தியாவின் 70-வது சுதந்திர தினமான இன்று, தலைநகர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர், டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை ஏற்றுக் கொண்ட மோடி, இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்திய சுதந்திரம் பெற்றதற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஏராளமான சவால்களை எதிர்கொள்ளும் திறன் 125 கோடி இந்தியர்களிடமும் உள்ளது என்று தெரிவித்தார்.