Home Featured நாடு ஜாலான் தெங்கு கிளானாவை ‘லிட்டில் இந்தியா’ என அடையாளப்படுத்த வேண்டும் – டாக்டர் சுப்ரா வலியுறுத்து!

ஜாலான் தெங்கு கிளானாவை ‘லிட்டில் இந்தியா’ என அடையாளப்படுத்த வேண்டும் – டாக்டர் சுப்ரா வலியுறுத்து!

687
0
SHARE
Ad

Subramaniam Drகிள்ளான் – பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள் நிறைந்த வணிகப் பகுதியான ஜாலான் தெங்கு கிளானாவை, அரசாங்கம், ‘லிட்டில் இந்தியா’ என அரசாங்கப் பதிவேட்டில் சேர்க்க வேண்டுமென மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியைக் காட்டிலும் இன்னும் கூடுதலான இந்திய வர்த்தகர்கள் அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

“லிட்டில் இந்தியா என்று அடையாளப்படுத்தி அதனை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். இந்திய சமுதாயத்தினரின் வர்த்தக மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அப்பகுதி பார்க்கப் பட வேண்டும்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இதனை இனரீதியாகத் தான் பார்க்கவில்லை என்றும், பொருளாதார ரீதியில் மட்டுமே தான் பார்ப்பதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் மஇகா தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா பேசியுள்ளார்.