Home Featured நாடு குடிநுழைவு அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய 3 சிங்கப்பூரர்கள் கைது!

குடிநுழைவு அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய 3 சிங்கப்பூரர்கள் கைது!

554
0
SHARE
Ad

gariஜோகூர் பாரு – ஜோகூர் பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சுங்க, குடிநுழைவு மற்றும் தொற்றுநோய் தடுப்பு வளாகத்தில், குடிநுழைவு அதிகாரியிடம் தவறான வார்த்தைகளைப் பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது பருவ வயது பிள்ளைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவர்கள் ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்கும் போது, காரின் பின் ஜன்னல் கண்ணாடியைத் திறந்து காட்டும் படி, அங்கு பணியில் இருந்த அதிகாரி கேட்டுக் கொள்ள, அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகின்றது.

அதோடு, அவர்களில் ஒருவர் அந்த அதிகாரியை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டியதாகவும் அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

இதனால் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைக்காக 14 நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்று ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் ரோஹைசி பகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.