Home Featured உலகம் கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி – 38 மணி நேரங்களுக்குப் பின் மீட்பு!

கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி – 38 மணி நேரங்களுக்குப் பின் மீட்பு!

561
0
SHARE
Ad

Rescueபெய்ஜிங் – ஜப்பான் பியூகுயோகாலில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகர் நோக்கி சொகுசுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதில் சீனாவைச் சேர்ந்த 32 வயதான பெண் பான் என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவர், திடீரென கடலில் தவறி விழுந்துள்ளார்.அதை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், கடலுக்குள் விழுந்த அவர் 38 மணி நேரங்கள் தண்ணீரில் மிதந்துள்ளார். இறுதியாக தற்செயலாக அங்கு வந்த மீன்பிடிப் படகு ஒன்று அவரை மீட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அவரது உடம்பில் ஜெல்லி மீன்கள் கொட்டியதால் சிறு காயங்களும், வெயில் தாக்கத்தால் கைகளில் கொப்பளம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.