Home Featured இந்தியா ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 9 இராணுவ வீரர்கள் காயம்!

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 9 இராணுவ வீரர்கள் காயம்!

585
0
SHARE
Ad

491955-army-dnaஸ்ரீநகர்- இந்தியாவில் 70-வது சுதந்திர தினம் இன்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹட்டா பகுதியில், இன்று திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் இராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், உடனடியாக, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை நோக்கி எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சண்டையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் பலியாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில், மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.