Home Featured நாடு 1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசலுடன் மலேசியக் கப்பல் மாயம்!

1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசலுடன் மலேசியக் கப்பல் மாயம்!

848
0
SHARE
Ad

indonesia-map35-600கோலாலம்பூர் – 900,000 லிட்டர்கள் டீசல் கொண்ட மலேசியக் கடற்படையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று இந்தோனிசியக் கடற்பகுதியில் மாயமாகிவிட்டதாக மலேசிய கடற்படை அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

வியெர் ஹார்மோனி என்ற அந்தக் கப்பல் இந்தோனிசியாவின் பாத்தாம் கடற்பகுதியில் மாயமாகிவிட்டதாக மலேசிய கடற்படை அறிவித்துள்ளது.

எனினும், அக்கப்பல் கடத்தப்பட்டுவிட்டதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. மலேசியாவின் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் இருந்து 1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசலை அக்கப்பல் கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice