Home Featured நாடு “தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்” நாதன் மறைவுக்கு சுப்ரா அனுதாபம்!

“தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்” நாதன் மறைவுக்கு சுப்ரா அனுதாபம்!

682
0
SHARE
Ad

Dr S. Subramaniam

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை மறைந்த சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களின் திடீர் மரணத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

“எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரும், உடன் பிறவா சகோதரருமான  எஸ்.ஆர் நாதன் அவர்களுடன் மலேசியா சிங்கப்பூர் இடையிலான உறவுப் பாலத்தையும் சரித்திரத்தையும் குறித்து அதிகமாகக் கலந்துரையாடியதுண்டு. எஸ்.ஆர் நாதன் அவர்களுடைய நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என அவருடைய மனத்திற்கு நெருக்கமான பலர் மலேசிய நாட்டில் இருக்கின்றனர். சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபரான திரு எஸ்.ஆர் நாதன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த தலைவராவார். சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட ஒரு நல்ல தலைவரை நாம் இப்பொழுது இழந்துவிட்டோம்” என டாக்டர் சுப்ரா இங்கு கோலாலம்பூரில் விடுக்கப்பட்ட தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தென் அமெரிக்க நாடு பெருவில் நடைபெறும் “எபெக்” எனப்படும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு டாக்டர் சுப்ரா தற்போது அந்நாட்டில் இருக்கின்றார்.

“இவ்வேளையில், அன்னாரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் சிங்கப்பூர் வாழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் இதன்வழி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.