Home Featured இந்தியா இந்தியாவில் ‘ஸ்கர்ட்’ அணிய வேண்டாம் – சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் அறிவுரை!

இந்தியாவில் ‘ஸ்கர்ட்’ அணிய வேண்டாம் – சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் அறிவுரை!

810
0
SHARE
Ad

short-skirts-story-647_042016052356புதுடெல்லி – இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இனி ‘ஸ்கர்ட்’ எனப்படும் குட்டைப் பாவாடை அணிய வேண்டாம் என மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களில், “வெல்கமிங் கிட்” எனப்படும் இந்தியாவைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்று வழங்கப்படும் என்றும், அதில் சில பரிந்துரைகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் பரிந்துரைகளில், குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்ற வேண்டாம். ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அவர்கள் பயணிக்கும் வாகனத்தின் நம்பர் பலகையையும் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பர் பலகை போட்டோவை அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.