Home Featured கலையுலகம் 100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் கொண்ட அலைவரிசை – மலேசியக் கலைஞர்கள் கோரிக்கை!

100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் கொண்ட அலைவரிசை – மலேசியக் கலைஞர்கள் கோரிக்கை!

767
0
SHARE
Ad

Channelகோலாலம்பூர் – மலேசிய கலைஞர்களின் பங்களிப்பில் உருவான உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று 100 சதவிகிதம் தனி அலைவரிசை வேண்டுமெனக் கோரி மலேசியக் கலைஞர்களில் ஒரு தரப்பினர் அஸ்ட்ரோவுக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளனர்.

குறிப்பாக அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-ல் ஒளிபரப்பட்டு வரும் நிகழ்ச்சிகளைக் கடுமையாக விமர்சித்து வரும் அவர்கள், அந்த அலைவரிசையை முற்றிலும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அலைவரிசையாக மாற்றும் படி அஸ்ட்ரோவுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மலேசியன் இந்தியன் கிரியேட்டிவ் கண்டண்ட் (Malaysian Indian Creative Content Action Force) என்ற பெயரிலான பேஸ்புக் பக்கம் மூலம் அஸ்ட்ரோவுக்கு எதிராகத் தங்களது விமர்சனங்களையும், வாதங்களையும் அத்தரப்பினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, வரும் செப்டம்பர் 2-ம் தேதி, புக்கிட் ஜாலிலில் ஒன்று கூடி அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், 100 சதவிகிதம் உள்ளூர் அலைவரிசை வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் ஆர்.சிவராஜா, தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி ஆகியோரிடமிருந்தும் ஆதரவைக் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.