Home Featured நாடு இணையத் தளங்களைக் கலக்கும் இந்தியச் சிறுவனின் மெர்டேக்கா முழக்கம்!

இணையத் தளங்களைக் கலக்கும் இந்தியச் சிறுவனின் மெர்டேக்கா முழக்கம்!

999
0
SHARE
Ad

merdeka boy - posted -subra power

கோலாலம்பூர் – மிக எளிமையான அடுக்குமாடிக் குடியிருப்பு. தனது வீட்டின் முன்னால் நடைபாதைப் பகுதியில் சுவரில் மலேசியக் கொடியை அலங்கரிக்கும் ஓர் இந்தியச் சிறுவன். அவனிடம் மலாய் மொழியில் மெர்டேக்கா குறித்துக் கேட்கப்படும்  சில கேள்விகள் – அதற்கு அவன் மலாய் மொழியில் கூறும் பதில்கள் –

இந்தப் பின்னணியில் மிகச் சாதாரணமாக எடுக்கப்பட்ட – அதிலும் அதிகம் தெளிவில்லாத – ஒரு காணொளி (வீடியோ) தற்போது இணையத் தளங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு கலக்கி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் 29-ஆம் தேதி “சுப்ரா பவர்” (Subra Power) என்ற முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த காணொளி ஈர்த்துள்ளது.

அதுமட்டுமின்றி இதுவரை 7,900-க்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அந்த சுவாரசியமானக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

https://www.facebook.com/subrapower/?fref=ts