Home Featured நாடு யுபிஎஸ்ஆர் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

யுபிஎஸ்ஆர் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

654
0
SHARE
Ad

upsrகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்ஆர் ஆறாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வுகளை எழுதவிருக்கின்றனர்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வுகளில் சிறப்பாக வெற்றியடைய பல அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதாச்சாரம் உயரவும், அவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கவும் கடுமையாக பாடுபட்டு வரும் தமிழாசிரியர்களையும் நாம் இந்தத் தருணத்தில் நினைவு கூர்வது பொருத்தமாகும்.

#TamilSchoolmychoice

கடந்த ஒன்பது மாதங்களாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார்ப்படுத்தி வந்திருக்கும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பிற்கும், உழைப்பிற்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று தொடங்கி யுபிஎஸ்ஆர் தேர்வுகள் எழுதும் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சிறந்த மதிப்பெண்களுடன் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறவும், அவர்களின் கல்விப் பயணம் மேலும் வெற்றிகரமாகத் தொடரவும் செல்லியல் சார்பாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.