கோலாலம்பூர் – அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் 100 சதவிகிதம் உள்ளூர் படைப்புகள் ஒளிபரப்ப வேண்டும் எனக் கேட்டு 200-க்கும் மேற்பட்ட மலேசியக் கலைஞர்கள் இன்று அஸ்ட்ரோ அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலேசியன் இந்தியன் கிரியேட்டிவ் கன்டென்ட் ஆக்சன் போர்ஸ் (Malaysian Indian Creative Content Action Force – MICCC) என்ற அமைப்பின் தலைவர் எஸ்.முனியாண்டி கூறுகையில், “இந்திய மொழிகளுக்கென அஸ்ட்ரோவில் 14 அலைவரிசைகள் உள்ளன. ஆனால் அதில் அனைத்தும் இந்தியாவில் இருந்து பெறப்படும் நிகழ்ச்சிகளாகவே உள்ளன. ஆனால் முற்றிலும் மலேசியத் தமிழ் அலைவரிசை அவர்களிடம் இல்லை”
“இந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில், ஒரு மலேசியத் தமிழ் அலைவரிசை கொண்டு வர இயலவில்லை என என்னிடம் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.