Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது!

பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது!

855
0
SHARE
Ad

space xகலிபோர்னியா – ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் பொருட்செலவில் பேஸ்புக் உருவாக்கிய செயற்கைக்கோளான ஆமோஸ் -6 சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில், விண்வெளிக்கு அனுப்புவதற்காக எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த போது, அச்செயற்கைக்கோள் திடீரென வெடித்துச் சிதறியது.

நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சியில் உள்ளது பேஸ்புக்.

#TamilSchoolmychoice