Home Featured நாடு ‘ராஜபக்சே வரும் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்’ – தேவமணி அறிக்கை!

‘ராஜபக்சே வரும் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்’ – தேவமணி அறிக்கை!

803
0
SHARE
Ad

Devamany

கோலாலம்பூர் – இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ளார்.

தமிழர்களின் மனதையும் மானத்தையும் காக்கும் வகையில் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என பிரதமர் துறை துணை அமைச்சரும் மஇகா தேசியத் துணைத்தலைவருமாகிய டத்தோஸ்ரீ எஸ். கே தேவமணி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

“இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு காரணகர்த்தாவாக விளங்கிய முன்னாள் அதிபர் ராஜபக்சே மலேசியாவில் கலந்தும் மாநாட்டில் நான் கலந்து கொண்டு கை குலுக்கு சிரித்து பேசுவது நம் இனத்திற்கு நான் செய்யும் பெரும் துரோகம் என்று கருதுகின்றேன்.”

“மஇகா- வில் 80 விழுகாட்டு உறுப்பினர்கள் தமிழர்கள். அவர்கள் என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். நம் தமிழ் இனத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் எந்த செயலுக்கும் என்றுமே நான் துணை போனதுமில்லை. நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் நான் என் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.”

“இந்த மாநாடு ஆசிய நிலையில் நடத்துவதால், ஆசிய நாடுகளின் எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இலங்கை நம் நாட்டின் நட்பு நாடாக இருப்பதால், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் மலேசியா வருகின்றார்.”

“தமிழர்களின் நலன் காப்பதில் மஇகா என்றுமே முன் நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை. அதே வேளையில் தமிழ் ஈழத்தில் நம் தமிழர்களின் போருக்கு பிந்திய உதவிகளை நம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் கட்டளையில் கணிசமான தொகை வழங்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது” என்றும் டத்தோஸ்ரீ எஸ். கே தேவமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.