Home Featured கலையுலகம் 10 ஆண்டுகளில் 7000 மணி நேரங்களுக்கும் கூடுதலான உள்ளூர் நிகழ்ச்சிகள் – அஸ்ட்ரோ விளக்கம்!

10 ஆண்டுகளில் 7000 மணி நேரங்களுக்கும் கூடுதலான உள்ளூர் நிகழ்ச்சிகள் – அஸ்ட்ரோ விளக்கம்!

1316
0
SHARE
Ad

astro

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் 100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட வேண்டும், மலேசியக் கலைஞர்களின் படைப்புகள் அதில் இடம்பெற வேண்டும் என்று கூறி இன்று செப்டம்பர் 2-ம் தேதி, புக்கிட் ஜாலிலில் அஸ்ட்ரோ கட்டிடத்திற்கு வெளியே மலேசியக் கலைஞர்களில் ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அஸ்ட்ரோ இந்த விவகாரம் குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதில் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“அஸ்ட்ரோவில் நாங்கள் முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் எங்களின் வாடிக்கையாளர்களை முதன்மைப் படுத்தி வருகிறோம். ஓர் உள்ளடக்கம் மற்றும் நுகர்வோர் நிறுவனமான அஸ்ட்ரோ, சந்தையில் இருக்கும் பல்வகை பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியை தனது தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருக்கும் தரமான உள்ளடக்கங்களைக் கொடுப்பதும், உள்ளூர்  உள்ளடக்கங்களைப் பிரகாசிக்கச் செய்வதும், எங்களின் ஆற்றல்மிக்க கலைஞர்களை வளர்ப்பதும் அடங்கும்.”

“உள்ளூர் படைப்புகளை காண்போரின் விகிதாச்சாரம் வெளிநாட்டு படைப்புகளைப் பார்ப்போருடன் ஒப்பிடுகையில் 10:90-ராகவே இருக்கிறது. இருந்த போதிலும் உள்ளூர் படைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி 30:70 என்ற அடிப்படையில் இருக்கிறது. சுருங்கக் கூறின், தமிழ் உள்ளடக்கங்களுக்கான எங்களின் மொத்த முதலீட்டில் 30% உள்ளூர் படைப்புகளைச் சார்ந்தது. சந்தை விருப்ப அளவைக் காட்டிலும் மும்மடங்கு இது அதிகமாகும்.”

“அஸ்ட்ரோ வானவில் சிறந்த உள்நாட்டு உள்ளடக்கங்களை ஒளிபரப்புகிறது;  அவற்றில் உள்ளூர் உள்ளடக்கங்களுக்கு மட்டுமே 80% நிதி ஒதுக்கப்படுகிறது.  உண்மை நிலவரம் என்னவென்றால்,  உள்ளூர் உள்ளடக்கங்களுக்கான  தயாரிப்பு செலவு அதிகமாகும். ஆன போதிலும் உள்ளூர் உள்ளடக்கங்களுக்கான  ஒளிபரப்பு நேரத்தை அதிகரிப்பதை நாங்கள் கடப்பாடாகக் கொண்டுள்ளோம். கடந்த 10 வருடங்களில், 7,000 மணி நேரங்களுக்கும் கூடுதலான உள்ளூர் தமிழ் உள்ளடக்கங்களை அஸ்ட்ரோ தயாரித்துள்ளது.”

“திறமை வாய்ந்த மலேசியர்களை ஊக்கமூட்டி வளர்த்து விடுவதோடு, இந்தியா, மொரீஷியஸ், சிங்கப்பூர் என அனைத்துலக அரங்கிற்கு அவர்களைக் கொண்டுச் செல்வதிலும் நாங்கள் முனைப்புக் காட்டி துணை நிற்கிறோம். வானவில் சூப்பர் ஸ்டார் , யுத்தமேடை போன்ற எங்களின் நிகழ்ச்சிகள் 1,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளித்திருக்கின்றன. அதே போல் 125-க்கும் மேற்பட்ட வானொலி அறிவிப்பாளர்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.”

“எங்களின் முன்னெடுப்புகளான உள்ளூர் தயாரிப்புகள் மற்றூம் தொகுக்கப்பட்ட அலைவரிசைகள் ஆகியவை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் அனைத்துலக விருதளிப்பு விழாக்களில் கூட நாங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். ஸ்ரீ அங்காசா (Seri Angkasa) விருதுகள், எடிசன் விருதுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அதிலும்,  தென் கிழக்காசியாவிலேயே சிறந்த தமிழ் துல்லிய ஒளிபரப்பு (HD) அலைவரிசை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எடிசன் விருதளிப்பில் வென்றுள்ளோம்.”

“தவிர,  நாடளாவிய நிலையில் சுகாதார பராமரிப்பு, கல்வி, திறன் தேர்ச்சி பயிற்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் என நூற்றுக்கணக்கான சமூக திட்டங்கள் வாயிலாக அஸ்ட்ரோ இந்திய சமூகத்துடன் தொடர்பில் இருக்கிறது. எங்களின் காலை நிகழ்ச்சியான விழுதுகள் மற்றும் 360 பாகை ஆகியவை  சமூகத்துக்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் இடையே நல்லதொரு பாலமாக விளங்கி வருவது கண்கூடு.”

“உள்ளூர் உள்ளடக்கங்களுக்கு அதிகளவில் முதலீடு செய்த ஒரே தனியார் ஒளிபரப்பு நிறுவனம் அஸ்ட்ரோ. மலேசிய உள்ளூர் இந்திய உள்ளடக்கங்களில் எங்களின் பங்கு 80% ஆகும். அஸ்ட்ரோ, உள்ளூர் உள்ளடக்கங்களை தொடர்ந்து மேம்படுத்துவதுடன் அவற்றுக்கு உறுதுணையாகவும் இருந்து வரும். வளர்ந்துவரும் எல்லையற்ற உள்ளடக்க உலகத்தில், எங்களின் வருடாந்திர பிரதான நிகழ்ச்சிகள் மலேசியாவில் மட்டுமில்லாமல் உலக ரீதியிலும் அதன் முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. எங்கள் இலக்கைப் பகிரும் உள்ளூர் தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க நாங்கள் எப்போதும் திறந்த மனதோடு இருக்கிறோம்.”

“இந்த வேளையில் ஆதரவு வழங்கி வரும் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். அஸ்ட்ரோவில் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவதைக் கடப்பாடாகக் கொண்டுள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து உள்ளூர் உள்ளடக்கங்களை மேலும் மேம்படுத்தப் படுத்துவதோடு மட்டுமின்றி உள்ளூர் திறமைசாலிகளை அனைத்துலக அரங்கிற்குக் கொண்டு செல்லுவதிலும் முனைப்பு காட்டுகிறோம்.” – இவ்வாறு அஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.