கோழிங்க வேட்டைக்காரனுக்கா பயப்படுது? அவன் கூட வரும் வேட்டை நாய்க்கு தான பயப்படுது? அது மாதிரி வேட்டைக்காரன் கொம்பையா பாண்டியன் கூட நெஞ்சை நிமித்திக்கிட்டு, மீசையை முறுக்கிக்கிட்டு வர கிடாரியக் கண்டு அந்த ஊரே ஒதுங்கி நிக்குது.
வலது கையா தனது வளர்ப்பு புள்ள கிடாரியும், இடது கையா தான் சொந்தப் புள்ளையையும் வச்சிக்கிட்டு கொம்பையா பாண்டியன், அந்த ஊரையே அடக்கி ஆளுறாரு. பல பேரை நசுக்கி, ஆட்டுச் சந்தையில இருந்து காய்கறிச் சந்தை வரைக்கும் பல தொழில தனது கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தவரு, அந்த ஊருல முக்குக்கு முக்கு எதிரிகளையும் உருவாக்கிடுறாரு.
நசுக்குன செடி ஒரு நாள் மேல எழும்பாமலா போயிரும்? ஒருநாள் கொம்பையா பாண்டியனை யாரோ கழுத்த அறுத்துப் போட்டிடுறாங்க. அவரு உசிருக்குப் போராடிக்கிட்டு இருக்கும் போது, விசுவாசியான கிடாரி அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன தேடி அலையிறாரு? பல உண்மைகளைத் தெரிஞ்சிக்குறாரு.. யாரு தான் கொம்பையா பாண்டியன வெட்டினது? அது தான் இந்தப் படத்தோட சுவாரசியம்.
நடிப்பு
கண்களில் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். இயல்பாகவே அவரது பேச்சு நடையில் கிராமிய மணம் வீசுவது அவரது கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
கதாநாயகி நிகிலா விமல் செம்பா கதாப்பாத்திரத்தில் துறுதுறுவென மிக இயல்பாக நடித்துள்ளார். பார்ப்பதற்கு மதுபாலா சாயலில் இருக்கிறார். இறுக்கமாக நகரும் கதையில், சற்று இளைப்பார வைப்பது அவர் தான்.
இவர்கள் தவிர படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கதாப்பாத்திரங்களும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களும் கிராமிய சாயலிலேயே இருப்பது மிகவும் ரசிக்க வைக்கின்றது. உதாரணமாக பொய்யாழி, எஸ்.என். பாண்டி, செம்பா, புலிக்குத்தி பாண்டி இப்படியாக கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சுவாரசியம்.
அதோடு, கதை சொல்லியாக வரும் பொய்யாழி, வீராப்பு பேசிக் கொண்டு திரியும் வயதானவர், கிடாரி மீது பொறாமை கொள்ளும் கொம்பையாவின் மகன்,மகனைப் பறி கொடுத்துவிட்டு, பழிவாங்கும் உணர்வோடு திரியும் பெண் என கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு ஈர்க்கிறது.
திரைக்கதை
ஆனால், தொடர்ச்சியாக வில்லன்களை அறிமுகப்படுத்திக் கொண்டே போவதால், பல இடங்களில் குழப்புகிறது.
அதோடு, கிடாரி கதாப்பாத்திரத்தை ரொம்ப வீரமானவன், முன் கோபக்காரன் என்பது கதாப்பாத்திரங்களின் வசனங்களில் தான் தெரிகின்றதே தவிர, சசிக்குமாரின் நடிப்பிலோ, உடல்மொழியிலோ அந்தக் கதாப்பாத்திரத்திற்கேற்ற திமிரும், கம்பீரமும் இல்லை. உதாரணமாக, கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், அதில் கார்த்தியின் நடிப்பு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப மிரட்டலாக இருக்கும்.
அதோடு, கடைசியாக, கிடாரியின் கிளைமாக்சில் வரும் திருப்பமும், அதன் பின்னர் வரும் காட்சியமைப்பும் சற்றே நெருடல். முழுமனதாக அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒளிப்பதிவு, இசை
அதற்கு ஏற்ப தர்புகா சிவாவின் பின்னணி இசையும், பாடல்களும் பக்கபலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில், கிடாரி.. சிரித்து ரசித்து பார்க்கும் வகையிலான பொழுதுபோக்குப் படமோ, கிராமிய மணம் வீசும் காதல் படமோ அல்ல. துரோகம், சண்டித்தனம் செய்த ஒருவனின் வாழ்வில் நடந்த சம்பவங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதை.
இரத்தம் தெறிக்கும் கொலைச் சம்பவங்கள் கொண்ட இப்படம் நிச்சயமாக குழந்தைகளுடன் பார்க்கக் கூடியது கிடையாது.
-ஃபீனிக்ஸ்தாசன்