இன்று வெள்ளிக்கிழமை, சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து பிபிபிஎம் (Parti Pribumi Bersatu Malaysia) கட்சியின் அதிகாரப்பூர்வ அனுமதிக் கடிதத்தை வாங்க, அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னால் லிம் கிட் சியாங்குடன் பணியாற்ற முடியும் என்ற போது, ஏன் அன்வாருடன் இணைந்து பணியாற்ற முடியாது?” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, ஆர்ஓஎஸ் இடம் மொகிதியின் யாசின் தனது புதிய கட்சிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments