பெங்களூரு – காவேரி நதி நீர் பிரச்சனை காரணமாக பெங்களூருவில் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களைத் தொடர்ந்து, தமிழ் நாட்டு வாகனப் பதிவு எண்களைக் கொண்ட 30 பேருந்துகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் 1,000 பேரைக் கொண்ட மத்திய துணை இராணுவத்தை பெங்களூருவுக்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பி வைத்துள்ளது.
துணை இராணுவத்தினர் மாநிலம் முழுவதும் எழுந்துள்ள கலவரங்களை அடக்கும் முயற்சிகளில் ஈடுபடுவர்.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுத்த தீர்ப்பில் 12,000 கன அடி காவேரி நதி நீரை தமிழ் நாட்டுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக தீவிரவாதக் குழுக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் 144 தடை உத்தரவு பெங்களூருவில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டு பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களும், தமிழர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர்.