Home Featured வணிகம் கபாலி சைவ பிரியாணி – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!

கபாலி சைவ பிரியாணி – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!

1128
0
SHARE
Ad

Air Asia

கோலாலம்பூர் – ‘சூப்பர் ஸ்டார்’ போன்று சாப்பிடலாம் என்ற அறிவிப்புடன், ஏர் ஆசியா விமான நிறுவனம் தங்களது பயணிகளுக்கு கபாலி சைவ பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது.

12 ரிங்கிட் விலையுள்ள இந்த சைவ பிரியாணியை ஏர் ஆசியா அகப்பக்கத்தின் வழி முன்பதிவு செய்பவர்களுக்கு 100 ஏர் ஆசியா புள்ளிகளும் (Air Asia Points) வழங்கவுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று செப்டம்பர் 12 முதல் தொடங்கியுள்ள சைவ பிரியாணி விற்பனை, அக்டோபர் 29-ம் தேதி வரையில் உள்ளது. அதுவரையில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பயணக்காலம் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேல் விவரங்களுக்கு ஏர் ஆசியா (http://www.airasia.com/) அகப்பக்கத்தை வலம் வரலாம்.