Home Featured தமிழ் நாடு தமிழகக் கடையடைப்பு – இறுதி நிலவரம்; பல தலைவர்கள் கைது!

தமிழகக் கடையடைப்பு – இறுதி நிலவரம்; பல தலைவர்கள் கைது!

868
0
SHARE
Ad

 

tamil-nadu-banth-vaiko-leading

சென்னை – தமிழ் நாடு முழுக்க இன்று  ஒருநாள் நடத்தப்படும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முழு கடையடைப்புப் போராட்டம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தின் இறுதி நிலவரச் செய்திகள்:-

மு.க.ஸ்டாலின் கைது

  • எழும்பூரில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைகோ கைது

  • மதிமுக தலைவர் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டார் (மேலே படம்). அங்கு இரயில் மறியலில் அவரோடு அவரது கட்சியினர் சுமார் 500 பேர் ஈடுபட்டனர். வைகோவுடன் மற்றவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொல்.திருமாவளவன் கைது

  • சென்னையில் தொல் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தையினர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது பேசின் பிரிட்ஜ் என்ற பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கனிமொழியும் கைது

  • திமுக மகளிரணியினருக்குத் தலைமை தாங்கி திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார்.

துரைமுருகன் காட்பாடியில் கைது

  • தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன் அவரது தொகுதியான வேலூர் காட்பாடியில் பிருந்தாவன் இரயிலை மறியல் செய்ய முற்பட்டபோது அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.

விஜய்காந்தின் தேமுதிகவும் போராட்டம்

  • விஜய்காந்தின் தலைமையிலான தேமுதிகவும் இன்றைய முழு கடையடைப்புப் போராட்டத்தில் இறங்குகின்றது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், தேமுதிக அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்தினர்.

பொன் இராதாகிருஷ்ணன்-ஜெயலலிதா சந்திப்பு

  • பாஜகவின் மத்திய இணை அமைச்சர் இன்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடையடைப்பு மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்தார்.