Home Featured கலையுலகம் விவாகரத்து செய்யப் போவதை உறுதிப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

விவாகரத்து செய்யப் போவதை உறுதிப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

894
0
SHARE
Ad

aswinசென்னை – ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, தனது கணவர் அஸ்வினுடன் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும், இருவீட்டுப் பெரியவர்களும் அவர்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கத்தில் முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இத்தகவலை, சௌந்தர்யாவே இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆம்.. எனது திருமணம் பற்றிய செய்திகள் உண்மை தான். கடந்த ஒரு வருடமாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்துப் பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்னுடைய குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரங்களுக்கு அனைவரும் மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு, தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் சௌந்தர்யாவுக்குத் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.