Home Featured நாடு ஹாருண் இறப்பு தொடர்பில் சர்ச்சைக் கருத்துத் தெரிவித்த 2 பேர் கைது!

ஹாருண் இறப்பு தொடர்பில் சர்ச்சைக் கருத்துத் தெரிவித்த 2 பேர் கைது!

1132
0
SHARE
Ad

SONY DSCகோலாலம்பூர் – பாஸ் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் ஹாருண் டின் காலமானது தொடர்பில், இஸ்லாமை அவமதிப்பது போல் நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த மூன்று பேரில் இருவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை பண்டார் உத்தாமாவில் ஒருவரும், ஷா ஆலமில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது நபர் ஈப்போவில் கைது செய்யப்படுவார் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-ன் கீழ் அவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice