Home Featured நாடு ஹாருண் பற்றிய சர்ச்சைக் கருத்து: ஜெலுத்தோங் எம்பி மீது விசாரணை!

ஹாருண் பற்றிய சர்ச்சைக் கருத்து: ஜெலுத்தோங் எம்பி மீது விசாரணை!

704
0
SHARE
Ad

jeff-ooiகோலாலம்பூர் – பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் காலமானது தொடர்பில் சர்ச்சையான கருத்துகள் தெரிவித்து கைதாகியுள்ளவர்கள் மத்தியில், இந்த விவகாரத்தில் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து காவல்துறை விசாரணையில் சிக்கியுள்ளார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஃப் ஊய்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹாருன் டின் இறந்த செய்தி வெளியானவுடன், தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஜெஃப் ஊய், “பிரியாவிடை (Adios) ஹாருண் டின்.. அங்கே அமைதி நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய (Adios) என்ற ஸ்பானிஷ் வார்த்தை தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதனை மரியாதைக்குறைவாகக் கருதும் பாஸ் ஆதரவாளர்கள் ஜெஃப் ஊய்க்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால், ஜெஃப் ஊய், தான் கூறியதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் அவ்வார்த்தை ஸ்பானிஷ் மொழியில் பிரியாவிடைக்குப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை என்றும் கூறி வருகின்றார்.

இந்நிலையில், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், விசாரணைக்கு உதவ ஜெஃப் ஊய் தானாக காவல்துறையில் சரணடைவது நல்லது அல்லது பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததற்காக அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவியல் சட்டம் பிரிவு 298-ன் கீழ், அவர் விசாரணை செய்யப்படுவார் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.