Home Featured உலகம் ஹாருண் டின்னின் நல்லுடல் கலிபோர்னியாவில் அடக்கம்!

ஹாருண் டின்னின் நல்லுடல் கலிபோர்னியாவில் அடக்கம்!

983
0
SHARE
Ad

haronகலிபோர்னியா – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணாத்தில், லிவர்மோர் என்ற இடத்திலுள்ள இஸ்லாம் கல்லறையில் (Five Pillars Muslim Cemetery) பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கு அமெரிக்க நேரப்படி மாலை 5.57 மணியளவில் (மலேசிய நேரப்படி காலை 8.56) அவர் அடக்கம் செய்யப்பட்டதாக, அவரது மகள் டாக்டர் ஹூடா ஹாருண் தனது பேஸ்புக்கில் இன்று சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாருண் டின், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி காலை 10.10 மணியளவில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.