Home Featured நாடு சுமூகத் தீர்வு காணும் வரை நாய் வளர்க்க மலாக்கா அரசு அனுமதி!

சுமூகத் தீர்வு காணும் வரை நாய் வளர்க்க மலாக்கா அரசு அனுமதி!

908
0
SHARE
Ad

datuk-idrisகோலாலம்பூர் – இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்படும் வரையில், மலாக்காவில் தரைவீடுகளில் நாய் வளர்ப்போர் அதனை வைத்திருக்கலாம் என்று அம்மாநில முதல்வர் இட்ரிஸ் ஹாரோன் அறிவித்துள்ளார்.

வளர்ப்பு நாய்களுக்குத் தொடர்ந்து உரிமம் வழங்கும் படி,  மலாக்காவிலுள்ள அனைத்து உள்ளூர் மன்றங்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும், நாய்கள் சத்தமாகக் குரைப்பதால் ஏற்படும் பிரச்சினையையும், புகார்களையும் சரிசெய்ய ஆலோசனை நடத்தப்படும் என்றும் இட்ரிஸ் ஹாரோன் கூறியுள்ளதாக, ‘தி ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice

 

 

Comments