Home Featured நாடு சிலாங்கூர் இளவரசருக்கு எதிரான கருத்து: முன்னாள் மலாக்கா முதல்வருக்கு அபராதம்!

சிலாங்கூர் இளவரசருக்கு எதிரான கருத்து: முன்னாள் மலாக்கா முதல்வருக்கு அபராதம்!

549
0
SHARE
Ad

rahim-thamby-chik2ஷா ஆலம் – சிலாங்கூர் இளவரசர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா குறித்து அவதூறான கருத்துகளை தனது பேஸ்புக்கில் பதிவு செய்த குற்றத்திற்காக முன்னாள் மலாக்கா முதல்வர் டான்ஸ்ரீ அப்துல் ராஹிம் தம்பி சீக்கிற்கு இன்று அமர்வு நீதிமன்றத்தில் 1,900 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 (1), (ஏ)-வின் கீழ் ராஹிம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அவர் கடந்த ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி, அக்குற்றத்தைப் புரிந்ததாக, இன்று செவ்வாய்க்கிழமை நிரூபிக்கப்பட்டது.

அதேவேளையில், அவர் தனது பேஸ்புக் பதிவு குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த தேச நிந்தனைக் குற்றச்சாட்டை அரசு தரப்பு இன்று வாபஸ் பெற்றுக் கொண்டது.

#TamilSchoolmychoice