Home நாடு அம்னோவிலிருந்து வெளியேறிய ரகிம் தம்பி சிக்!

அம்னோவிலிருந்து வெளியேறிய ரகிம் தம்பி சிக்!

974
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாம் வெளியாகக்கூடும் எனும் ஆருடங்கள், வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக, அம்னோவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மலாக்கா முதலமைச்சருமான டான்ஶ்ரீ ரகிம் தம்பி சிக் கட்சியிலிருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தார்.

ரகிம் 1982 முதல் 1994 வரை மலாக்காவின் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் அம்னோவிலிருந்து வெளியேறுவதற்கு காரணம் சாஹிட் ஹமிடி என்று பெர்சாத்து கட்சியில் இணைவதற்கான பாரத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

சாஹிட்டின் தலைமையில் கட்சி இன்னும் பழைய நிலைக்குத் திரும்பாததைக் குறிப்பிட்ட அவர், 40 ஆண்டு காலமாக அம்னோவிலிருந்து மலாய் சமூகத்திற்கு தொண்டாற்றியப் பிறகு அக்கட்சியிலிருந்து வெளியேறுவது வேதனையளிக்கிறது என்றார்.

#TamilSchoolmychoice

மேலும் பேசிய ரகிம், அம்னோவில் ஊடுருவி இருக்கும் ஊழல் நடவடிக்கைகள் புற்று நோய் போல அக்கட்சியை அடிமட்டம் வரை அழித்து விட்டது எனக் கூறினார். பெர்சாத்து கட்சி மலாய் சமூகத்தின் நலனை நன்முறையில் காக்கும் என்ற நம்பிக்கையில் தாம் அக்கட்சியில் இணைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.