Home நாடு கட்சித் தேர்தலில் ஊழல் நடந்ததாக சாஹிட் மீது குற்றச்சாட்டு!

கட்சித் தேர்தலில் ஊழல் நடந்ததாக சாஹிட் மீது குற்றச்சாட்டு!

1218
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஜூன் மாதம் நடந்த அம்னோ கட்சியின் தேர்தலின் போது, தற்போதைய கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, தனக்கு வாக்களிக்குமாறு அம்னோ பிரதிநிதிகளுக்கு கையூட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அறிக்கையொன்று ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோஶ்ரீ அடாம் பாக்கி கூறினார்.

நாங்கள் இந்தப் புகாரைக் கவனித்து, தேவைப்பட்டால் விசாரணையை மேற்கொள்ள தயாராக உள்ளோம். ஊழல் கூறுகள் குறிப்பிட்ட தேர்தலின் போது இருக்குமாயின், சாஹிட் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சாஹிட் 99 தொகுதிகளின் ஆதரவைப் பெற்று கடந்த அம்னோ கட்சித் தேர்தலில் தலைவரானார். அவரை எதிர்த்து நின்ற கைரி ஜமாலுடின் 61 தொகுதிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சாஹிட் தற்போது நம்பிக்கை மோசடி குற்றவியல் சட்டத்தின் கீழ், 46 ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி உள்ளார்.