சிட்னி – நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து சாயிரின்ஸ் சென்ற ஜெட்ஸ்டார் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தினுள் புகை ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அறிந்த விமானி, உடனடியாக சம்பந்தப்பட்ட எஞ்சினை நிறுத்திவிட்டு, பிரிஸ்பேன் நகரில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கியுள்ளார்.
இது குறித்து ஜெட்ஸ்டார் விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் எஞ்சினை நிறுத்திய விமானி, பிரிஸ்பேனை நோக்கி விமானத்தைத் திருப்பியுள்ளார்.இது போன்ற சம்பவங்கள் நடப்பது ரொம்ப அரிதானது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் எமது பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் அச்சூழ்நிலையை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கின்றனர்” என்று ஜெட்ஸ்டார் தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=Gx500COONpY